உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மடையை எப்போதான் மராமத்து பார்ப்பீங்க காதுகேளாத நீர்வளத்துறை

மடையை எப்போதான் மராமத்து பார்ப்பீங்க காதுகேளாத நீர்வளத்துறை

மேலுார் : மேலவ ள வு வேப்பனேரி கண்மாய் மடையை கட்டித் தரக் கோரி விவசாயிகள் வலியுறுத்தியும், ஆறு வருடங்களாக காலம் கடத்துவதாக நீர்வளத் துறை மீது புகார் எழுந்துள்ளது. மேலவளவில் 60 ஏக்கர் பரப்பளவில் நீர்வளத் துறைக்கு சொந்தமான வேப்பனேரி கண்மாய் உள்ளது. இக்கண்மாய் புலிப்பட்டி 1 வது மடை வழியாக வரும் தண்ணீரால் நிரம்பி, நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்திற்கு பாசனம் அளிக்கிறது. கண்மாயில் இருந்து 3 மடைகள் வழியாக தண்ணீர் திறக்கப்படும். இதில் நடுமடை, ஷட்டர் கதவு சிதிலமடைந்துள்ளது. விவசாயி சிதம்பரம் கூறியதாவது: தரமற்ற முறையில் மடை கட்டப்பட்டுள்ளதால் உடைப்பு ஏற்பட்டு 24 மணி நேரமும் தண்ணீர் வீணாகிறது. கண்மாயில் தண்ணீரை சேமிக்க முடியவில்லை. அறுவடை முடிந்தும் தண்ணீர் வெளியேறுவதால் மடையை கட்டித் தரும்படி நீர்வளத்துறையில் 6 ஆண்டுகளாக மனு கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை. இருமாதங்களுக்கு முன் வந்த அதிகாரிகள் உறுதியளித்தும் கட்ட வில்லை. விரைவில் தண்ணீர் திறக்க உள்ளதால், மாவட்ட நிர்வாகம் மராமத்து பணிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவ பிரபாகர் கூறுகையில், மடையை உடைத்து உடனே வேலை பார்க்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !