உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படுமா

சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படுமா

சோழவந்தான்: தேனுாரில் சாக்கடைக்கால் வாயை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. சுப்பையா கூறியதாவது: இங்கு சாக்கடை கால்வாய் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. கழிவுநீர் செல்வதற்கு போதுமான வழியின்றி குறுகியும் பல இடங்களில் பக்க சுவர்கள் சேதமடைந்தும் உள்ளது. குறிப்பாக பள்ளிவாசல் அருகே பழைய காலனியில் சுவர்கள் இடிந்து கால்வாயை மூடும் நிலை உள்ளது. இதனால் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. தேங்கியிருக்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும்உள்ளது. மேலும் மழைநீர் செல்வதற்கு போதுமான வழியில்லாததால் ரோடு முழுவதும் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. ஒன்றிய அதிகாரிகள் புதிய சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !