நிழற்குடை அகற்றப்படுமா
சோழவந்தான் ஜன.18 -- -: -திருவேடகம் தர்ஹா அருகே ஆபத்தான நிழற்குடையை அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். மதுரை மெயின் ரோட்டில் தர்ஹாஅருகே 20 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடை கட்டப்பட்டது. பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது. கட்டடத்தின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு விழும் நிலை உள்ளது. காரைகள் பெயர்ந்து கம்பிகள் தெரிகின்றன. ஜன்னல்கள் உடைந்து இருக்கைகள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளன. விபரீதம் விளைவதற்கு முன் ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிழற்குடையை அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.