உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நிழற்குடை அகற்றப்படுமா

 நிழற்குடை அகற்றப்படுமா

சோழவந்தான்: திருவேடகம் காலனியில் மதுரை மெயின் ரோட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடை அமைக்கப்பட்டது. பராமரிப்பில்லாமல் காரை பெயர்ந்து கம்பிகள் நீட்டிக் கொண்டுள்ளன. கட்டடத்தின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடலாம் என்ற நிலை உள்ளது. இருக்கைகள் சேதமடைந்து செடி, கொடிகள் அடர்ந்து புதராக மாறி வருகிறது. இரவில் விளக்குகள் இல்லாததால் 'பார்'ஆகவும் செயல்படுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை