உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தியால் தீர்வு ரூ.96.30 லட்சத்திற்கு பணிகள்

தினமலர் செய்தியால் தீர்வு ரூ.96.30 லட்சத்திற்கு பணிகள்

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை பெயர்ந்து வசதியின்றி கருங்கற்களாக இருந்தது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக ரூ.96.30 லட்சத்தில் 'பேவர் பிளாக்' சாலை , நாடகமேடை உள்ளிட்ட பணிகளுக்காக பூமி பூஜை நடந்தது. எம்.எல்.ஏ., வெங்கடேசன் துவக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ஜெயலட்சுமி, துணைத்தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். முதல்நிலை உதவியாளர் முத்துப்பாண்டி வரவேற்றார். முன்னாள் நகர செயலாளர் பிரகாஷ், நகர துணைச் செயலாளர் கண்ணன், நிர்வாகிகள் முரளி, அரவிந்தன், வினோத் பங்கேற்றனர். சுகாதார பணி மேற்பார்வையாளர் சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை