உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச தொழில் பயிற்சியில் சேரலாம்

இலவச தொழில் பயிற்சியில் சேரலாம்

மதுரை: இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், பெட்கிராட் சார்பில் மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் இயற்கை சோப்பு தயாரித்தல், சணல் பொருட்கள் தயாரித்தல் 26 நாள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை நடக்கும் பயிற்சிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். குளியல் சோப்பு, மூலிகை குளியல் பொடி, சலவை சோப்பு, பினாயில், சோப் ஆயில், ஹேண்ட்வாஷ், பாடிவாஷ், ஷாம்பூ, முக கிரீம், லிப் பாம் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் சணல் பொருட்கள் தயாரிப்பில் லேப்டாப் பேக், லஞ்ச், ஸ்கூல், வாட்டர் கேன், ஷாப்பிங் பேக் உட்பட 17 வகையான சணல் பைகள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். தொழில் துவங்குவதற்கான எஸ்.எஸ்.ஐ., சான்றிதழ், மாவட்ட தொழில் மையத்தின் குடிசைத்தொழில் சான்றிதழ் பெற்றுத் தரப்படும். முன்பதிவுக்கு : 86100 12770.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை