உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 8 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

8 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

சோழவந்தான்: சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் கரட்டுப்பட்டி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கருப்பட்டி பிரிவு அருகே கரூர், வெங்கமேட்டை சேர்ந்த தங்கவேல் மகன் சதீஷ்குமார் 28, சந்தேகத்திற்கிடமான வகையில் காருடன் நின்றிருந்தார். அவரிடம் விசாரித்ததில் 8 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் மேல்விசாரணை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !