போக்சோ வழக்கில் வாலிபருக்கு சிறை
மதுரை: மதுரை யாகப்பாநகர் வசந்த். இவர் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் 2022ல் கைது செய்யப்பட்டார். போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் அவருக்கு 28 ஆண்டுகள் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி முத்துக்குமாரவேல் உத்தரவிட்டார்.