உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முன்விரோத தகராறில் இளைஞர் கொலை

முன்விரோத தகராறில் இளைஞர் கொலை

மதுரை: மதுரை புதுவிளாங்குடி யுவராஜ், 24. கோவையில் கட்டட வேலை செய்கிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஷியாம்குமார், சபா ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. தீபாவளிக்காக மதுரை வந்த யுவராஜ், அக்., 19 இரவு, நண்பர் சித்தனுடன் 19, வீட்டின் முன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஷியாம்குமார், சபா உட்பட 6 பேர், வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் யுவராஜை வெட்டினர். தடுத்த சித்தன் மீதும் வெட்டுக்காயம் விழுந்தது. காயமுற்ற இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சித்தன் நேற்று இறந்தார். இதைதொடர்ந்து கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்து நான்கு பேரை கூடல்புதுார் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை