உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / மீனவர் வீட்டில் 10 சவரன் திருட்டு

மீனவர் வீட்டில் 10 சவரன் திருட்டு

மயிலாடுதுறை, : சீர்காழி அருகே மீனவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா கோணயாம்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் நந்தகோபால்.65; மீனவர். இவர் நேற்று முன்தினம் இரவு அதே ஊரில் நடைபெற்ற சீதளா பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவிற்கு மனைவி வசந்தியுடன் சென்றார். வீட்டில் மருமகள் வைதேகி மட்டும் இருந்தார். வாசல் கதவை பூட்டி சென்றுள்ளனர். இரவு 11.30 மணி அளவில் வீட்டின் மற்றொரு அறையில் சத்தம் கேட்பதாக வைதேகி தனது மாமியார் வசந்திக்கு தகவல் தெரிவித்தார்.உடனடியாக நந்தகோபால் அவரது மனைவி இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே அலமாரி கதவை உடைத்து அதிலிருந்து 10 சவரன் நகைகள் மற்றும் ரூ 31 ஆயிரம் பணத்தை மர்ம நபர் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து நந்தகோபால் அளித்த புகாரின்பேரில் திருவெண்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை