உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / வட்டியில்லா கடன் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது

வட்டியில்லா கடன் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது

மயிலாடுதுறை:நிதி நிறுவனங்களில் வட்டியில்லா கடன் வாங்கித் தருவதாக கூறி, பொதுமக்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றியவரை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை அடுத்த பாகசாலை கண்டமங்கலத்தை சேர்ந்தவர் ஏசுராஜ்,33; இவர் மயிலாடுதுறை, சீர்காழி, பாடசாலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை மக்களிடம் மைக்ரோ பைனான்ஸ் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் வட்டியில்லா, குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக கூறி பலரிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் கமிஷன் தொகையை வசூலித்துள்ளார். ஆனால், யாருக்கும் கடன் வாங்கி தரவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், ஏசுராஜ் கடன் வாங்கி தருவதாக மாவட்டம் முழுவதும் பலரிடம் ரூ.50 லட்சம் அளவிற்கு பணம் வசூலித்து ஏமாற்றியது தெரிய வந்தது.அதன்பேரில் ஏசுராஜை கைது செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை