சிறுமிக்கு திருமணம் மணமகன் கைது
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சிறுமியை திருமணம் செய்த மணமகன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை அடுத்த கருவாழக்கரை மேலையூர் கிராமத்தில் உள்ள கோவிலில் பிளஸ் 2 படித்து வரும் 16 வயது சிறுமிக்கு திருமணம் நடந்தது குறித்து, மாவட்ட சமூக நல பாதுகாப்பு அலுவலர் பச்சையம்மாள், அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் மகளிர் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, சிறுமியை திருமணம் செய்த நாகை மாவட்டம் திருப்புகளூரை சேர்ந்த ராஜா மகன் பார்த்திபன்,28; மயிலாடுதுறை அடுத்த பட்டவர்த்தி குறிச்சி சாலையைச் சேர்ந்த தங்கராசு மகன் வீரமணி,43; ஆகியோரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு தொடர்பாக முத்துலட்சுமி, காளியம்மாள் ஆகியோரை தேடிவருகின்றனர்.