உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / மின்சாரம் பாய்ந்து விபத்து ஒருவர் பலி; மூவர் காயம்

மின்சாரம் பாய்ந்து விபத்து ஒருவர் பலி; மூவர் காயம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அடுத்த வேலங்குடியை சேர்ந்தவர் வெங்கட்ராஜன், 55; இவர், நேற்று காலை தன் வீட்டின் மேற்கூரையை தார்ப்பாய் போட்டு மூடினார். அப்போது, இடையூறாக இருந்த கேபிள் ஒயரை அகற்றியபோது, அருகில் சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்தது. அவரை காப்பாற்ற முயன்ற அவரது மனைவி வசந்தி, மகள் ரம்யா மற்றும் வீடு கட்டுமான பணியில் ஈடுபட்ட போலகுடியைச் சேர்ந்த பிரபு, 41, ஆகியோர் காயமடைந்தனர்.அவர்களை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பிரபு இறந்தார். மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி