மேலும் செய்திகள்
மது பாட்டில் கடத்தியவர் கைது
08-Oct-2024
மயிலாடுதுறை:சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை வெட்டிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த காத்திருப்பு வடக்கு அஞ்சாமனை பகுதியை சேர்ந்தவர் அகோரமூர்த்தி, 54; வைத்தீஸ்வரன்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.இவரது வீட்டின் அருகே வசிப்பவர் ராமதாஸ்,50; விவசாயி. இவரது மனைவி பிரிந்து சென்றதற்கு, அகோரமூர்த்தியே காரணம் என முன்விரோதம் கொண்டிருந்தார்.இதன் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த அகோரமூர்த்தியை, ராமதாஸ் அரிவாளால் வெட்டினார்.அதில் படுகாயமடைந்த அகோரமூர்த்தியை அவரது உறவினர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து, சீர்காழி போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிந்து, ராமதாசை கைது செய்தனர்.
08-Oct-2024