உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / ஓ.என்.ஜி.சி.,க்கு எதிர்ப்பு; பொதுமக்கள் திடீர் மறியல்

ஓ.என்.ஜி.சி.,க்கு எதிர்ப்பு; பொதுமக்கள் திடீர் மறியல்

குத்தாலம்; ஓ.என்.ஜி.சி., பராமரிப்பு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, மேலையூர் ஊராட்சியில் ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் எரிவாயு எண்ணெய் கிணறு, 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது. இந்த கிணற்றில் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் சில நாட்களாக பராமரிப்பு பணி மேற்கொண்டுள்ளது. இதை கண்டித்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தேரழுந்துார் கடை வீதியில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். அப்போது, ஓ.என்.ஜி.சி., நிறுவனம் மேலையூர் பகுதியில் நிறுவியுள்ள தளவாட பொருட்களை அகற்றி, பணியாளர்களுடன் வெளியேற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். குத்தாலம் தாசில்தார் ராஜரத்தினம் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தி, பணிகளை நிறுத்தி தளவாட பொருட்களை அப்புறப்படுத்துவதாக உறுதி அளித்தனர். பின், போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ