மேலும் செய்திகள்
வீட்டின் கதவை உடைத்து 4 சவரன் நகை, பணம் திருட்டு
12-Sep-2024
மயிலாடுதுறை: இலுப்பூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் காயங்களுடன் சந்தேகப்படும் வகையில் இறந்திருந்தார். அவர் அணிந்திருந்த நகை, பணம் மாயமானது குறித்து போலீசார் பெண்ணின் கணவர் மற்றும் வீட்டுப் பணி பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பஜில்முகமது.61. இவரது மனைவி மர்ஜானா பேகம்.54. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் வெளியூர் மற்றும் வெளிநாட்டில் உள்ளனர். இந்நிலையில் நேற்று மயிலாடுதுறையில் வீட்டில் தனியாக இருந்த மர்ஜானா பேகம் முகத்தில் லேசான காயங்களுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் மயங்கி கிடந்துள்ளார். உடன் அருகில் இருந்த டாக்டரை அழைத்து பார்த்தபோது அவர் 2 மணி நேரத்திற்கு முன்பாக இறந்தது தெரியவந்தது. மேலும் அவர் அணிந்திருந்த 14 பவுன் எடையுள்ள வளையல், செயின் மற்றும் ரூ 50 ஆயிரம் பணம் மாயமானதும் தெரியவந்தது. மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. மர்ஜானா பேகத்தின் கணவர் பஜில் முகமது, வீட்டுப் பணிப்பெண் நதியா.40. ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனிப்படை போலீசார் அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
12-Sep-2024