மேலும் செய்திகள்
த.வெ.க.,வினர் மீது நாகை போலீசார் வழக்கு
22-Sep-2025
நாகை மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்
13-Sep-2025
சிவ மந்திரம் பாட150 பேர் இலங்கை பயணம்
05-Sep-2025
நாகப்பட்டினம், நாகை மாவட்டத்தில் உள்ள தானிய சேமிப்பு கிடங்கை அரசு கூடுதல் தலைமை செயலர் இரவு நேரத்தில் ஆயவு மேற்கொண்டது ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலர் ராதாகிருஷ்ணன், நேற்று நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, வேதாரண்யம், நாகையில் துறை ரீதியான நலத்திட்டங்களை வழங்கினார். கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.இதற்காக நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு திருவாரூரில் இருந்து நாகை வந்தவர், திடீரென வேதாரண்யம் அருகேயுள்ள கோவில்பத்து சேமிப்பு கிடங்கிற்கு சென்றார். ஆசியாவிலேயே 2 வது மிகப்பெரிய சேமிப்பு கிடங்கான இக்கிடங்கில் 1.26 லட்சம் டன் தானியங்கள் இருப்பு வைக்கும் வசதி உள்ளது.கஜா புயலால் கடுமையாக சேதமடைந்த இக்கிடங்கு புனரமைக்கப்பட்டது. இருப்பினும் குடிநீர், கழிவறை, சாலை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததோடு பாதுகாப்பு குறைபாடும் உள்ளதாக புகார்கள் உள்ளன.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு இக்கிடங்கிற்கு சென்ற ராதாகிருஷ்ணன், அங்கு இருப்பு வைத்திருந்த நெல் மூட்டைகள் தரம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்ததார்.இரவு நேரத்தில் அரசு கூடுதல் தலைமை செயலர் அதிரடி ஆய்வால் ஊழியர்கள் கலக்கமடைந்தனர்.
22-Sep-2025
13-Sep-2025
05-Sep-2025