மேலும் செய்திகள்
த.வெ.க.,வினர் மீது நாகை போலீசார் வழக்கு
22-Sep-2025
நாகை மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்
13-Sep-2025
சிவ மந்திரம் பாட150 பேர் இலங்கை பயணம்
05-Sep-2025
நாகப்பட்டினம் : நாகை மாவட்டம், தெற்கு பொய்கைநல்லுாரைச் சேர்ந்த, 40 வயது பெண்ணின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்ட நிலையில், தன் 16 வயது மகளுடன் அவர் வசிக்கிறார். கடந்த 19ம் தேதி இரவு, மாவு அரைப்பதற்காக வெளியில் சென்றுள்ளார்.வீட்டில் தனியாக துாங்கிக் கொண்டிருந்த சிறுமி, அதிகாலை, 1:00 மணிக்கு கண்விழித்து பார்த்தபோது, அருகே மர்மநபர் ஒருவர் நின்றிருந்தார். அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டதால், அந்த நபர் சிறுமியை தாக்கிவிட்டு தப்பினார்.இதற்கிடையே வீட்டிற்கு பின்புறம், சிறுமியின் தாய் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், உடல் முழுதும் ரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்டார். அங்கிருந்தோர், தாய், மகள் இருவரையும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு கருவேலங்கடை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய நபரை போலீசார் விசாரித்ததில், காரைக்காலை சேர்ந்த முத்துகுமார், 28, என்பதும், 40 வயது பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிந்தது. முத்துகுமாரை போலீசார் கைது செய்தனர்.போலீசாரிடம் இருந்து தப்பிய முத்துகுமார் கீழே விழுந்ததில், கை மற்றும் காலில் எலும்புமுறிவு ஏற்பட்டதால், நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
22-Sep-2025
13-Sep-2025
05-Sep-2025