மேலும் செய்திகள்
த.வெ.க.,வினர் மீது நாகை போலீசார் வழக்கு
22-Sep-2025
நாகை மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்
13-Sep-2025
சிவ மந்திரம் பாட150 பேர் இலங்கை பயணம்
05-Sep-2025
நாகப்பட்டினம் : நாகையில் இருந்து கடல் வழியாக கடத்த இருந்த ரூ.8 கோடி மதிப்புடைய கஞ்சா மற்றும் 3 சொகுசு கார்களை பறிமுதல் செய்து, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து கடல் வழியே இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் மேலப்பிடாகை அருகே நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது இனோவா, பென்ஸ் மற்றும் சுமோ என வரிசையாக வந்த 3 கார்களையும் நிறுத்தி சோதனையிட்டனர். 3 கார்களிலும் 10 சாக்கு மூட்டைகளில், ரூ.8 கோடி மதிப்புடைய 200 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.விசாரணையில், திருப்பூர் மணிராஜ்,36; புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேடுகுடி கவுதமன்,36; திருக்கோவிலுார் சகோதரர்கள் தட்சிணாமூர்த்தி,41; சிவமூர்த்தி,38; ஆகிய நால்வரும் ஒடிசா மாநிலம் தாரி கொண்டாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, வேதாரண்யம், கடல் பகுதியில் காத்திருக்கும் நபர்களிடம் கொடுக்க வந்ததும், வேதாரண்யத்தில் இருந்து இவர்களது கூட்டாளிகள் கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது.இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிந்து, மணிராஜ் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் கடத்தி வந்த 200 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 கார்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த கடத்தலில் தொடர்புடைய மற்றவர்களை தேடிவருகின்றனர்.
22-Sep-2025
13-Sep-2025
05-Sep-2025