மேலும் செய்திகள்
த.வெ.க.,வினர் மீது நாகை போலீசார் வழக்கு
22-Sep-2025
நாகை மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்
13-Sep-2025
சிவ மந்திரம் பாட150 பேர் இலங்கை பயணம்
05-Sep-2025
நாகப்பட்டினம் : இந்தியா - இலங்கை இடையே சுற்றுலா மற்றும் நட்புறவை மேம்படுத்தும் வகையில், நாகை துறைமுகத்தில் இருந்து, இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் பயணியர் கப்பல் போக்குவரத்து துவக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 150 பேர் பயணிக்கும் குளிர்சாதன வசதியுடன் கூடிய 'சிரியா பாணி' என்ற கப்பல் பயணத்தை கடந்த ஆண்டு அக்., 14ம் தேதி, பிரதமர் மோடி, காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். சுற்றுலா பயணியரிடம் ஆர்வம் குறைவு மற்றும் கடலின் பருவ மாற்றத்தால் சில தினங்களில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.தனியார் வசம் பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை ஒப்படைக்கப்பட்டு, இன்று முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் பயணியர் கப்பல் போக்குவரத்து துவங்கும் என, அறிவிக்கப்பட்டது. கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணியர் இலங்கை செல்ல ஆர்வத்துடன் இருந்தனர்.இந்நிலையில், தனியார் கப்பல் சேவை நிறுவனம், தவிர்க்க முடியாத சட்ட ரீதியான அனுமதிகள், தாமதமான கப்பல் வருகையால், ஏற்கனவே அறிவித்தபடி கப்பல் போக்குவரத்தை துவங்கவில்லை. வரும், 17ம் தேதி கப்பல் சேவை துவங்கும்.முன்பதிவு செய்த பயணியர், 17ம் தேதியோ அல்லது வேறொரு தேதியிலோ பயணிக்கலாம் அல்லது கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
22-Sep-2025
13-Sep-2025
05-Sep-2025