மேலும் செய்திகள்
த.வெ.க.,வினர் மீது நாகை போலீசார் வழக்கு
22-Sep-2025
நாகை மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்
13-Sep-2025
சிவ மந்திரம் பாட150 பேர் இலங்கை பயணம்
05-Sep-2025
நாகப்பட்டினம்:நாகையில், நுாற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகள், அடையாள பெறுவதற்கு காத்திருக்கும் நிலையில், கலெக்டர் அறிவிப்பு மாற்றுத்திறனாளிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டத்தில் ஏராளமான மாற்றத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை கிடைக்காமல் காத்திருக்கின்றனர். மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம், நாகை அரசு மருத்துவமனையில் நடந்தது. பின் தேர்தல் நடைமுறைகளால் அடையாள அட்டை முகாம் ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் புதிய தேசிய அடையாள வழங்கும் முகாம் பிரதி மாதம் 2 வது செவ்வாய் கிழமையில், ஒரத்துார் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பிரதி மாதம் 2வது வெள்ளிக் கிழமைகளில் வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும் நடைபெறும் என கலெக்டர் ஜானி டாம் வர்க்கீஸ் அறிவித்தார். இந்த அறிவிப்பு மாற்றுத் திறனாளிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.மாற்றுத் திறனாளிகள் கூறியதாவது:வழக்கமாக நாகை அரசு மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலக வளாகத்தில் முகாம் நடத்தப்படும். தொலை துார கிராமங்களில் இருந்து நாங்கள் வருவது எவ்வளவு சிரமம் என்று அலுவலர்களுக்கு தெரியாது.இந்நிலையில், பஸ் வசதி இல்லாத நாகையில் இருந்து 12 கி.மீ., துாரமுள்ள ஒரத்துாருக்கு செல்லுங்கள் என மனசாட்சியே இல்லாமல் அதிகாரிகள் கூறுவது வேதனையாக உள்ளது. எங்களின் நிலை கருதி, நாகை அரசு மருத்துவமனையிலேயே முகாம் நடத்தி அடையாள அட்டை வழங்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.
22-Sep-2025
13-Sep-2025
05-Sep-2025