மேலும் செய்திகள்
முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வி.ஏ.ஓ., கொடூர கொலை
09-Nov-2025
நாகப்பட்டினம்: நாகையில், 'சஸ்பெண்ட்' வி.ஏ.ஓ., கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், திருநங்கையர் இருவரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம், வாழக்கரையை சேர்ந்தவர் ராஜாராம், 35. திருவாய்மூரில் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிந்தார். லஞ்ச வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இவர், நவ., 7 மாலை, காரைக்கால், கோட்டுச்சேரியில் உள்ள மனைவியை பார்க்க சென்றார். இந்நிலையில், இ.சி.ஆர்., சாலையில் செல்லுார் என்ற இடத்தில் நேற்று முன்தினம் காலை, அவர் முகம் சிதைத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். வெளிப்பாளையம் போலீசார் விசாரித்தனர். அதில், செல்லுாரை சேர்ந்த திருநங்கையர் நிவேதா, 19, கள்ளக்குறிச்சி ஸ்ரீகவி, 20, ஆகியோரை நேற்று கைது செய்தனர். விசாரணையில், மனைவியை பார்க்க சென்ற ராஜாராம், செல்லுார் சாலையோரம் நின்றிருந்த நிவேதா, ஸ்ரீகவி, ஆகியோரை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். பின், மூவரும் வயல் வெளியில், மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், நிவேதா, ஸ்ரீகவி ஆகியோர் கல்லால் தாக்கியதில் ராஜாராம் உயிரிழந்தது தெரிந்தது.
09-Nov-2025