இலங்கைக்கு கடந்த முயன்ற 410 கிலோ ஹான்ஸ் பறிமுதல்
நாகப்பட்டினம்:இலங்கைக்கு கடத்துவதற்காக பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 410 கிலோ புகையிலை பொருட்களை, நாகையில் போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினம் போலீசார் திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் சாலையில் அடைப்பாறு பாலத்தில் நேற்று முன்தினம் இரவு, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேதாரண்யம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். 10 சாக்குகளில் கூல் லிப், 24 சாக்கு பைகளில் ஹான்ஸ் என 34 மூட்டைகளில் 410 கிலோ எடையுடைய புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில், பெங்களூரில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது.கடத்தி வந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சிவகுமார்,45, ராஜஸ்தான் மாநிலம் பிரவின் குமார்,27, ஆகியோரை கைது செய்து, புகையிலை பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.