உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / அழகியநாதர் கோவில் கும்பாபிஷேகம்

அழகியநாதர் கோவில் கும்பாபிஷேகம்

வேதாரண்யம்: தேத்தாக்குடி வடக்கு அகிலாண்டேஸ்வரி சமேத அழகியநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்றுமுன்தினம் நடந்தது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி வடக்கு கிராமத்தில், அகிலாண்டேஸ்வரி சமேத அழகியநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் மிகவும் பழமையானது. கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து, கோவில் திருப்பணிகள் நடந்து வந்தது. பணிகள் நிறைவு பெற்று, நேற்றுமுன்தினம் காலையில் வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி இரண்டு நாட்கள் யாக சாலைகள் பூஜைகள் நடந்து, கடம் புறப்பாடு நிகழ்ந்தது. காலை 10.15 மணிக்கு ஆலய கோபுர கலசத்தில் சிவாச்சார்யார்கள் கும்பாபிஷேக புனித நீரை ஊற்றினர். தொடர்ந்து மூலவருக்கு மஹா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். திருப்பணிக்குழுவினரும், தேத்தாக்குடி வடக்கு கிராம மக்களும் கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்