மேலும் செய்திகள்
த.வெ.க.,வினர் மீது நாகை போலீசார் வழக்கு
22-Sep-2025
நாகை மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்
13-Sep-2025
சிவ மந்திரம் பாட150 பேர் இலங்கை பயணம்
05-Sep-2025
வேதாரண்யம்: வேதாரண்யம் சட்டசபை தொகுதியை சேர்ந்த பிராந்தியங்கரை, கூத்தங்குடி ஆகிய கிராமங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் 131 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைன்டர், பேன் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இந்த இரு கிராமங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ., காமராஜ் முன்னிலை வகித்தார். வேதாரண்யம் தாலுக்கா பிராந்தியங்கரை கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் 19 பயனாளிகளுக்கும், திருக்குவளை தாலுக்கா கூத்தங்குடியில் 112 பயனாளிகளுக்கும் விலையில்லா மிக்ஸி, கிரைன்டர், பேன் ஆகிய பொருட்களை மயிலாடுதுறை எம்.பி., மணியன் வழங்கினார்.
கலெக்டர் முனுசாமி தலைமை வகித்து பேசியதாவது: மாவட்டம் முழுவதும் நான்கு லட்சத்து 24 ஆயிரம் ரேஷன் கார்டுகாரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் படிப்படியாக பொருட்கள் வழங்கப்படும். இந்தாண்டு 57 ஆயிரம் பேருக்கு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கில் கொண்டு தேர்வு செய்யப்ப்பட்டுள்ளன. குறைந்த மக்கள் தொகை உள்ள கிராமங்களுக்கு முதலில் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாருறு அவர் பேசினார். மாவட்ட வழங்கல் அலுவலர் பரமசிவம், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ரவிச்சந்திரன், தொகுதி செயலாளர் சண்முகராசு, ஒன்றிய செயலாளர்கள் சிவானந்தம், பாலசுப்பிரமணியன், துணை செயலாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
22-Sep-2025
13-Sep-2025
05-Sep-2025