மேலும் செய்திகள்
ஆற்று மணல் விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
18-Jun-2025
நாகப்பட்டினம்:நாகை அருகே சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட பரோட்டா மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.நாகை மாவட்டம், திட்டச்சேரியை சேர்ந்தவர் நுார்முகமது,31, அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர், 7 ம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.அவரிடம் இருந்து தப்பி சென்ற சிறுமி, பள்ளி தலைமையாசிரியரிடம் கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், நாகை மகளிர் போலீசார், திட்டச்சேரியை சேர்ந்த பரோட்ட மாஸ்டர் நூர்முகமது,31, என்பவரை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
18-Jun-2025