உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / அறிவிப்புடன் நிற்கும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் விரக்தியில் கைம்பெண்கள்

அறிவிப்புடன் நிற்கும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் விரக்தியில் கைம்பெண்கள்

நாகப்பட்டினம்:தமிழகத்தில், கைம் பெண்கள் மற்றும் ஆதரவற் றோர் மகளிர் நலவாரியம் அமைக்க உத்தரவிட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் செயல்பாட்டிற்கு வராததால், கைம்பெண்கள் அரசு மீது விரக்தியில் உள்ளனர். கைம்பெண்கள் மற்றும் தனித்து வாழும் பெண்க ளின் வாழ்வு தன்னம் பிக் கையோடு மேம்பாடு அடைய, தனித்துறை வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு, கடந்த 2022ம் ஆண்டு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் அமைத்து உத்தரவிட்டது. ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்தும், நல வாரியம் செயல்படாமல் அறிவிப்போடு உள்ளது. இதனால், அரசு மீது கைம்பெண்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து நாகை மாவட்ட விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் தலைவர் கஸ்துாரி கூறுகையில், தமிழகத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட விதவைகள் உள்ளனர். 15லட்சம் பேர் உள்ள மாற்றத்திறனாளிகளுக்கு தனித்துறை உள்ளது. சமூகத்தில் சக மனிதர்களாக வாழ தனித்துறை வேண்டும் என நீண்ட நாட்களாக கேட்ட நிலையில், நலவாரியம் அறிவிப்பும் அறிவிப்போடு நிற்கிறது. நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 ஆயிரம் கைம்பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 200 கைம்பெண்கள் சுய உதவிக் குழுகளை அமைத்து சமூகத்தில் சம பெண்களாக வாழ வழிவகை செய்துள்ளோம். அவர்களுடைய பிள்ளைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்புக்கு உதவி வருகிறோம். எனவே, நலவாரியத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். தேர்தலில், கைம்பெண்கள் பிரச்னைகளை தீர்க்க முன்வரும் அரசியல் கட்சியினருக்கு எங்கள் ஆதரவு கிடைக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ