உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேசிய அளவில் தனித்துவ அடையாள எண் பெறமுகாமில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு

தேசிய அளவில் தனித்துவ அடையாள எண் பெறமுகாமில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு

தேசிய அளவில் தனித்துவ அடையாள எண் பெறமுகாமில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்புநாமக்கல்:'மத்திய, மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெற, தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம். அதனால், விவசாயிகள் சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:விவசாயிகள், அரசின் பல்வேறு திட்டப்பலன்களை பெற, தங்களது நில உடைமை விபரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை, ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையிலும், அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும், அனைத்து விபரங்களையும் மின்னணு முறையில் சேகரிக்க, தமிழகத்தில் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தற்போது, விவசாயிகளின் பதிவு விபரங்களுடன், ஆதார் எண், மொபைல் போன் எண், நில உடைமை விபரங்களையும் விடுபாடின்றி இணைக்கும் பணி, சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்தில் நடந்து வருகிறது. மேலும், விவசாயிகள் பொது சேவை மையம் சென்று அங்கும் நில உடைமை விபரங்கள் இணைக்கப்பட்ட பின், அனைத்து விபரங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண், ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும்.நாமக்கல் மாவட்டத்தில், ஒரு லட்சத்து, 7,432 விவசாயிகளில், தற்போது, 38,013 விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண் - உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள், அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று, தங்கள் நில உடைமை விபரங்கள், ஆதார், மொபைல் எண் ஆகிய விபரங்களை அளித்து, எவ்வித கட்டணமுமின்றி, வரும், 31க்குள் பதிவு செய்து பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ