உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் அரசு மகளிர் கல்லுாரியில்சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

நாமக்கல் அரசு மகளிர் கல்லுாரியில்சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

நாமக்கல் அரசு மகளிர் கல்லுாரியில்சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்நாமக்கல், :நாமக்கல் - திருச்சி சாலையில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இதில், 3,200 மாணவியர் படித்து வருகின்றனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாசில்லா போகி மற்றும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார். அதில், பாரம்பரிய உடையணிந்த மாணவியர், விறகு அடுப்பில் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து கரும்பு, மஞ்சள், மாவிலை தோரணம் கட்டி, 'பொங்கலோ, பொங்கல்' எனக்கூறி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, பல்வேறு பாடல்களுக்கு நடனமாடியும், ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டனர். இதில் அனைத்துத்துறை பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை