ரேஷன் அரிசி கடத்தி வந்தஇருவர் நாமக்கல்லில் கைது
ரேஷன் அரிசி கடத்தி வந்தஇருவர் நாமக்கல்லில் கைதுநாமக்கல்:ஈரோடு மாவட்டத்தில் இருந்து, 1,540 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணவேணி தலைமையில், நாமக்கல் போலீஸ் எஸ்.ஐ.,ஆறுமுகநயினார் மற்றும் பறக்கும்படை அதிகாரிகளுடன் இணைந்து, எர்ணாபுரம் பிரிவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஆம்னி வேனை சோதனை செய்வதற்காக நிறுத்தினர். அதில், 22 பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில், 1,540 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து வாகனத்துடன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். வாகனத்தை ஓட்டி வந்த ஈரோடு மாவட்டம், பவானி குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தாமோதரன், 36, சுரேஷ், 40, ஆகிய இருவரை கைது செய்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், பவானி பகுதியில் உள்ள மக்களிடம் இருந்து, ரேஷன் அரிசியை வாங்கி வந்து, புரோக்கர்கள் மூலம் நாமக்கல்லில் உள்ள கோழி பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.