மேலும் செய்திகள்
குற்றவாளி கைது
20-Jan-2025
மக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகள் அகற்றம்
28-Jan-2025
சைக்கிள் மீது கார் மோதியவிபத்தில் முதியவர் பலிஎலச்சிபாளையம்:எலச்சிபாளையம் அருகே, முகாசி கிராமம், கிளாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம், 70; நேற்று மாலை, 6:30 மணிக்கு, மாணிக்கம்பாளையத்தில் இருந்து அவரது வீட்டிற்கு சைக்கிளில் சென்றார். புள்ளாகவுண்டம்பட்டி இந்தியன் வங்கி எதிரே சென்று கொண்டிருந்தபோது, திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார், சைக்கிள் மீது நேருக்குநேர் மோதியது.இதில், படுகாயமடைந்த வேலாயுதத்தை மீட்டு, மாணிக்கம்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், நாமக்கல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லும்போது உயிரிழந்தார். இதுகுறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Jan-2025
28-Jan-2025