மேலும் செய்திகள்
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்
10-Feb-2025
தி.கோடு கே.எஸ்.ஆர்., கல்விநிறுவனத்தில் நிறுவனர் தின விழாதிருச்செங்கோடு:-திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனங்களில், 42வது நிறுவனர் தின விழா கொண்டாடப்பட்டது. நிர்வாக அறங்காவலர் ராஜம்மாள் ரங்கசாமி, தலைவர் சீனிவாசன், துணைத்தலைவர் சச்சின் ஆகியோர் தலைமை வகித்தனர். பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு துறை தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன், நிறுவனர் தொண்டாற்றிய பணிகள் மற்றும் முன்னேற்றத்தை விவரித்தார். துணைத்தலைவர் சச்சின், மிஷன் கே.எஸ்.ஆர்.இ.ஐ., என்ற தலைப்பில் பேசினார். சிறப்பு விருந்தினராக திருச்சி சிவா எம்.பி., கலந்துகொண்டார். அவர், 'தமிழ்மொழி மீது பற்று, நாட்டுப்பற்றுடன் கூடிய பணி' என்ற தலைப்பில் பேசினார். நிர்வாக இயக்குனர் மோகன், கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனங்களின் அனைத்து கல்லுாரி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியில், சிறந்த மாணவர்கள், 17 பேர் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.கே.எஸ்.ஆர்., பல் மருத்துவ கல்லுாரி முதல்வர் சரத் அசோகன் உள்ளிட்ட பேராசிரியர்கள் வாழ்த்தி பேசினர்.
10-Feb-2025