மேலும் செய்திகள்
டூவீலர் மீது வேன் மோதி ஒருவர் பலி
16-Mar-2025
பைக் -- லாரி மோதிதொழிலாளி பலிநாமக்கல்:மோகனுார் அடுத்த பெரமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் யோகேஸ், 29; கூலித்தொழிலாளி. அவர், நேற்று மதியம், 3:00 மணிக்கு, தன், 'பஜாஜ் சிடி 100' பைக்கில், நாமக்கல்லில் இருந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார். வள்ளிபுரம் - பாலப்பட்டி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த ஈச்சர் லாரி, பைக் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த யோகேஸ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Mar-2025