உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆலாம்பாளையம் டவுன் பஞ்., எல்லையில் பலகை வைப்பு

ஆலாம்பாளையம் டவுன் பஞ்., எல்லையில் பலகை வைப்பு

ஆலாம்பாளையம் டவுன் பஞ்., எல்லையில் பலகை வைப்புபள்ளிப்பாளையம்:ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்து பகுதியில், எல்லை அளவீடு செய்து பலகை வைக்கப்பட்டுள்ளது.பள்ளிப்பாளையம் அருகே, ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்து உள்ளது. மொத்தம், 15 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் குடியிருப்பு, விசைத்தறி கூடம் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகரித்து கொண்டு வருகின்றன. ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்து எல்லையை சுற்றிலும், கிராம பஞ்சாயத்து பகுதிகள் உள்ளன. எல்லை பிரச்னையால் பல சமயத்தில் குப்பை, கழிவுகள் அகற்றுவதில் குழப்பம் ஏற்படுகிறது. இதனால் சுகாதார பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.தற்போது எளிதில் எல்லையை கண்டுபிடிக்கும் வகையில், ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்து பகுதி முழுவதும் எல்லையை அளவீடு செய்து, 10 இடங்களில் ஆலாம்பாளையம் தேர்வு நிலை பேரூராட்சி, தங்கள் வருகைக்கு நன்றி என, பலகை வைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, 15 வார்டுகளிலும் சாலைகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்தவுடன், ஒவ்வொரு சாலையிலும் வழிகாட்டி பலகை வைக்க, டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை