கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பனைசெய்வோர் குறித்து தகவல் தர அறிவுறுத்தல்
கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பனைசெய்வோர் குறித்து தகவல் தர அறிவுறுத்தல்பள்ளிப்பாளையம்:கொக்கராயன்பேட்டை, மொளசி பகுதியில், டி.ஐ.ஜி., உமா ஆய்வு செய்தார். அப்போது, கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பனை செய்வோர் குறித்து தகவல் தெரிந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தர அறிவுறுத்தினார்.பள்ளிப்பாளையம் அருகே, மொளசி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட மொளசி, ராக்கியாவலசு, முதலப்பாளையம், இறையமங்கலம், சிக்கநாய்க்கன்பாளையம், பிளிக்கல் மேடு, அம்மாசிபாளையம், கொக்கராயன்பேட்டை ஆகிய பகுதிகளில், நேற்று காலை, 11:00 மணிக்கு சேலம் டி.ஐ.ஜி., உமா ஆய்வு செய்தார்.அப்போது, பழைய மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டவர்களை சந்தித்து, தற்போது என்ன தொழில் செய்து கொண்டிருக்கின்றனர். மறு வாழ்வுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, கொக்கராயன்பேட்டையில் பொதுமக்களை சந்தித்து, கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள், கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பனை செய்வோர் குறித்து தகவல் தெரிந்தால், போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என, பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.நாமக்கல் மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் தனராசு, இன்ஸ்பெக்டர் பிரபாவதி, மற்றும் மொளசி போலீசார் உடனிருந்தனர்.