கூட்டுறவு மேலாண் பட்டய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர்
கூட்டுறவு மேலாண் பட்டய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் நாமக்கல்:நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு மட்டும், 2024--25ம் ஆண்டிற்கான 24வது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண் பட்டய பயிற்சி, நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தொடங்கப்படவுள்ளது. பயிற்சிக்கு, 2025 ஏப்., 16ம் தேதி அன்று அதிகாரபூர்வ இணையதளமான WWW.tncu.gov.tn.inமூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.2025 மே 1ம் தேதியன்று குறைந்தபட்சம், 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் பதிவேற்றம் செய்து, விண்ணப்ப கட்டணம், 100 ரூபாயை இணையவழியில் மட்டுமே செலுத்த வேண்டும். இணையதளத்தின் மூலம் மே, 6ம் தேதி மாலை 5:30 மணி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு WWW.tncu.gov.tn.inஎன்ற இணையதளத்தின் மூலமாகவும் அல்லது நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையம், 796- சேலம் பிரதான சாலை (மயில்வாகனம் காம்ப்ளக்ஸ்), முருகன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில், நாமக்கல் 637 001 என்ற முகவரியிலோ அல்லது 04286-290908 என்ற தொலைபேசி, 9080838008 என்ற மொபைல் எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.