உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோழிகளுக்கு மூச்சுக்குழாய் அயற்சி நோய் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்

கோழிகளுக்கு மூச்சுக்குழாய் அயற்சி நோய் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்

நாமக்கல்: நாமக்கல், கால்நடை மருத்துவக்கல்லுாரி வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்ட வானிலையில் கடந்த வாரம் பகல், 95, இரவு, 75.2 டிகிரி என்ற வெப்ப அளவுகள் காணப்பட்டது. மாவட்-டத்தில் சில இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு வானம் பெரும்பாலும் மேகமூட்டத்-துடன், லேசானது முதல் மிதமான மழை காணப்படும். பகல் வெப்பம், 91.4 டிகிரியாகவும், இரவு வெப்பம், 71.6 டிகிரியாகவும் காணப்படும்.கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வ-கத்தில், ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் மேல் மூச்சுக்குழாய் அயற்சி மற்றும் இறக்கை அழுகல் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது. எனவே, பண்ணையா-ளர்கள் மேல் மூச்சுக்குழாய் அயற்சி நோய் மற்றும் இறக்கை அழுகல் பரவலை தடுக்கவும், நோயின் தாக்கத்தை குறைக்கவும் உயிர் பாதுகாப்பு முறைகளை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை