உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேர்நிலை கட்டும்பணி தீவிரம்

தேர்நிலை கட்டும்பணி தீவிரம்

சேந்தமங்கலம்,: சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பழமையான தேர் உள்ளது.இந்த தேரை நிறுத்துவதற்காக, கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன் கடைவீதியில் தேர்நிலை கட்டப்பட்டிருந்தது. இந்த தேர்நிலை நாளடைவில் சேதமடைந்தது. இதனால், தேர் திருவிழா முடிந்ததும், தேர் நிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.இதையடுத்து, கடைவீதியில், 8.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சின்னத்தேர் நிலை கட்டும் பணி, சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. வரும் மாசி மாதம், தேர்த்திருவிழா நடக்க உள்ளதால், தற்போது, தேர்நிலை கட்டும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை