உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குடிநீர் குழாய்சீரமைப்பு பணி மந்தம்

குடிநீர் குழாய்சீரமைப்பு பணி மந்தம்

குடிநீர் குழாய்சீரமைப்பு பணி மந்தம்பள்ளிப்பாளையம், :பள்ளிப்பாளையம் அடுத்த, ஆவத்திபாளையம் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்து, பிரதான குடிநீர் குழாய் மூலம் திருச்செங்கோடு பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பள்ளிப்பாளையம் அருகே, ஆசிரியர் காலனி பகுதியில் பதிக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாகி சாலையில் சென்றது.கடந்த, 20ல் திருச்செங்கோடு நகராட்சி பணியாளர்கள், பொக்லைன் மூலம் சாலையில் பள்ளம் தோண்டி, குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், பணிகள் பாதியிலேயே உள்ளன.இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மந்தகதியில் நடந்து வரும் குடிநீர் குழாய் சீரமைப்பு பணியை விரைவாக முடிக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ