உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாநகரம் சுத்தமாக இருக்கஈரோடு கமிஷனர் அழைப்பு

மாநகரம் சுத்தமாக இருக்கஈரோடு கமிஷனர் அழைப்பு

மாநகரம் சுத்தமாக இருக்கஈரோடு கமிஷனர் அழைப்புஈரோடு:ஈரோடு மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோடு மாநகராட்சியில் உள்ள, 60 வார்டுகளிலும், மாஸ் கிளீனிங் பணிகள் மேற்கொள்ளும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. வாரந்தோறும் செவ்வாய்கிழமை, சனிக்கிழமையில், மண்டலத்துக்கு தலா இரு வார்டுகள் என்ற அடிப்படையில், எட்டு வார்டுகளில் மாஸ் கிளீனிங் பணிகள் செய்யப்படும்.சுகாதாரத்தை ஊக்குவிப்பது, நோய் பரவுவதை குறைப்பது, சுத்தமான சூழலை பராமரிப்பது, சுகாதார நிலையை மேம்படுத்துவது என்ற அடிப்படையில் துாய்மை பணி செய்யப்படுகிறது. பொதுமக்கள் வீட்டில் உருவாகும் குப்பையை மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து வீட்டிற்கு வரும் துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை வியாபாரிகளும், பொதுமக்களும் தவிர்க்க வேண்டும். குப்பையை தெருவில் வீசுவதை தவிர்த்து, நகரத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை