மேலும் செய்திகள்
143 கிலோ புகையிலை கார் பறிமுதல்: 2 பேர் கைது
26-Feb-2025
மின்வாரிய அலுவலகத்தில்ஒயர் திருடிய இருவர் கைதுகுமாரபாளையம்:குமாரபாளையம், மின் வாரிய அலுவலகத்தில் ஒயர்கள் திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.குமாரபாளையம் அருகே, எதிர்மேடு தனியார் கல்லுாரி பின்புறம் உள்ள மின்வாரிய அலுவலக பண்டக சாலை முன், நேற்று காலை 7:00 மணியளவில் இரு நபர்கள் மின் ஒயர் சுருள்களை, டூவீலரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். அப்போது, அங்கு வந்த மின்வாரிய உதவி பொறியாளர் வாமலை யார் நீங்கள் எங்கு கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்க, அவர்கள் வாகனத்தில் வேகமாக தப்பி சென்றனர். இதையடுத்து, மின்வாரிய ஊழியர்கள் இருவரையும் துரத்தி சென்று பிடித்தனர். அவர்களிடமிருந்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஒயர் சுருளைகள், டி.வி.எஸ். 50 மொபட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. குமாரபாளையம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் வட்டமலை, வளையக்காரனுாரை சேர்ந்த வடிவேல், 28, ஜீவா, 25, என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், திருடிய மின் சுருளை, டூவீலரை பறிமுதல் செய்தனர்.
26-Feb-2025