விசைத்தறி, ஜவுளித்துறை தொழிலுக்கு வளர்ச்சியான பட்ஜெட்
விசைத்தறி, ஜவுளித்துறை தொழிலுக்கு வளர்ச்சியான பட்ஜெட்நமது நிருபர்வி.ஜெயகுமார் வெள்ளையன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலை வர்: தமிழக பட்ஜெட்டில் மாணவர்களுக்கும், மகளிருக்கும் பல்வேறு சலுகைகள் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வணிகர்களுக்கான சலுகைகள், பெரிய அளவில் இடம் பெறாதது ஏமாற்றம். இந்த நிதியாண்டில், வங்கிகள் மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஆறுதல் தருகிறது. மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்துவது மற்றும் உயர்த்தப்பட்ட சொத்து வரி, தொழில் வரி, தொழில் உரிம கட்டணம் போன்றவை மறுபரிசீலனை செய்யப்பட்டு, அவை குறைக்கப்படுவதற்கான அறிவிப்பு வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.வி.டி.கருணாநிதி, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைமை ஆலோசகர்: விசைத்தறியாளர்கள் பயன்பெறும் வகையில், 50 கோடி ரூபாயில் விசைத்தறிகளை நவீனப்படுத்தல் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால், தொய்வு நிலையில் இருக்கும் விசைத்தறி தொழில் வளர்ச்சியடையும். விலையில்லா வேட்டி சேலைக்கு, 673 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைத்தறிக்கு, 1,980 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விசைத்தறி, ஜவுளித்துறை தொழிலுக்கு வளர்ச்சி சார்ந்த பட்ஜெட்டாக உள்ளது.எம்.எஸ்.மதிவாணன், தமிழ்நாடு விசைத்தறி சம்மேளன தலைவர்: விசைத்தறி தொழில் மேம்பட, 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தமைக்கு நன்றி. இந்த தொழிலை நம்பி, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். வரும் காலங்களில், கூடுதல் நிதி ஒதுக்கி விசைத்தறி தொழில் மேம்பட உதவ வேண்டு கிறோம். பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். ஏனெனில், ஜவுளி உற்பத்திக்கு நமக்கே பருத்தி இன்னும் தேவைப்படும் போது, இதனை ஏற்றுமதி செய்தால், நமக்கு பற்றாக்குறை ஏற்படும். இதற்கு பதிலாக, பருத்தியை நுாலாக்கி, ஆடையாக நெய்து, அதை ஏற்றுமதி செய்தால், தொழில் வளம் பெருகும். பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.நா.சுந்தரம், கைத்தறி நெசவாளர், ஜேடர்பாளையம்: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்கும் என்ற தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. பரமத்தி வேலுார் தாலுகாவில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோ ரிக்கை. இதுகுறித்து அறிக்கை வரும் என, எதிர்பார்ப்பில் இருந்தோம். ஆனால் எந்த அறிவிப்பும் இல்லை.ரா.பிரணவகுமார், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் பட்டதாரிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்: விவசாயிகளுக்கான தொலைநோக்கு திட்டம் இல்லை. இளைஞர்களை, படித்த பட்டதாரிகளை புதிய தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டங்கள் ஏதும் இல்லை. சுற்றுலா வளர்ச்சிக்கான மற்றும் மாற்றத்திற்கான திட்டங்கள் எதுவும் இல்லை.