மேலும் செய்திகள்
திடீரென பெய்த மழையால் நெல் அறுவடை பாதிப்பு
13-Mar-2025
அறுவடை இயந்திரத்தை வாடகைக்குஎடுக்காததால் தாக்குதல்: இருவர் கைதுகுமாரபாளையம்:குமாரபாளையம் அருகே, கல்லங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ், 46; விவசாயி. இவர், தன் வயலில் விளைந்த நெற் பயிர்களை அறுவடை செய்ய, அறுவடை இயந்திரம் கேட்டு, குமாரபாளையம் அருகே, குள்ளநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 24, ஆத்துார் பகுதியை சேர்ந்த கார்த்தி, 24, ஆகியோரிடம் கட்டணம் விசாரித்துள்ளார். அப்போது, அவர்கள், 'ஒரு மணி நேரத்திற்கு, 2,200 ரூபாய்' என, தெரிவித்துள்ளனர். தொகை அதிகமாக இருந்ததால், வேறொரு நபரிடம் பேசி நெற்பயிர்களை அறுவடை செய்து முடித்துவிட்டார்.இதனால் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன், கார்த்தி ஆகிய இருவரும், யுவராஜை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயமடைந்த யுவராஜ், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதுகுறித்து புகார்படி, குமாரபாளையம் போலீசார், கோபாலகிருஷ்ணன், கார்த்தியை கைது செய்தனர்.
13-Mar-2025