பகுதி நேர நகை மதிப்பீட்டாளர்பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
பகுதி நேர நகை மதிப்பீட்டாளர்பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்புநாமக்கல்:'கூட்டுறவு மேலாண் நிலையத்தில், பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவா ளர் அருளரசு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் கூட்டுறவு மேலாண் நிலையத்தில், பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, வார இறுதி நாட்களான, சனி, ஞயிற்றுக்கிழமைகளில் மட்டும் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி வரும், ஏப்., 15ல் தொடங்குகிறது. பயிற்சிக்கான விண்ணப்பம், நேற்று முதல், வரும் ஏப்., 13 வரை, பயிற்சி நிலையத்தில், 118 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். பயிற்சி காலம், இரண்டு மாதம். கல்வித்தகுதி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி. 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. பயிற்சி கட்டணம், 4,550 ரூபாய்.இந்த கட்டணத்தில், தரம் அறியும் உபகரணங்கள் வழங்கப்படும். 40 மணி நேரம் வகுப்பறை பயிற்சியும், 60 மணி நேரமும் செயல் முறை பயிற்சியும் அளிக்கப்படும். கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும், நகை மதிப்பீட்டாளராக பணியில் சேர வாய்ப்பு உள்ளது.விபரங்களுக்கு, 'நாமக்கல் கூட்டுறவு மேலாண் நிலையம், 796, சேலம் பிரதான சாலை, முருகன் கோவில் அருகில், நாமக்கல் - 637001' என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04286--290908, 9080838008 என்ற தொலைபேசி, மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.