உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

மோகனுார்: நாமக்கல் மாவட்டம், மோகனுாரில் நேற்று இரவு, 7:00 மணியளவில் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை புரிந்தார்.ஊர் எல்லையில், அவருக்கு பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு வேத மந்திரங்கள் முழங்க பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், அங்குள்ள பெருமாள் கோவிலுக்கு சுவாமிகள் சென்றார். அங்கு உலக நன்மைக்காகவும், மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டியும் சிறப்பு குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். பூஜைக்கு பின் பக்தர்களுக்கு அருளுரையுடன் ஆசி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை