அக்னி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
அக்னி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்ப.வேலுார்,:ப.வேலுார் அருகே, நன்செய் இடையாறில் பிரசித்தி பெற்ற அக்னி மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, தினந்தோறும் ஆறு கால பூஜை நடந்து வருகிறது. தை முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காலை, 6:00 மணிக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.