உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாலை விபத்தில்தொழிலாளி பலி

சாலை விபத்தில்தொழிலாளி பலி

சாலை விபத்தில்தொழிலாளி பலிநாமகிரிப்பேட்டை,:வெண்ணந்துார் யூனியன், கெடமலையை சேர்ந்தவர் காத்தான் மகன் நடராஜ், 43; இவர், தற்போது கப்பலுாத்து பகுதியில் வசித்து வந்தார். நேற்று மதியம், ஆர்.புதுப்பட்டிக்கு சென்று ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு கப்பலுாத்துக்கு, 'ஸ்கூட்டி' பெப் வண்டியில் சென்று கொண்டிருந்தார்.மெட்டாலாவில் இருந்து ஆர்.புதுப்பட்டிக்கு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக லாரியும், டூவீலரும் மோதிக்கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட நடராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை