உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மனு

சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மனு

சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மனுபள்ளிப்பாளையம், : பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் ஏராளமான சாய ஆலைகள் உள்ளன. இந்த சாய ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவுநீர், நேரடியாக ஆற்றில் கலப்பதால் தண்ணீர் மாசடைகிறது. மேலும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது.இந்த சாயக்கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நேற்று பள்ளிப்பாளையம் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்க தலைவர் மாதேஸ்வரன், செயலாளர் ஜெய்சங்கர் தலைமையில் சங்க நிர்வாகிகள், ஈரோடு எம்.பி., பிரகாஷை சந்தித்து, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்ககோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட, எம்.பி., நடவடிக்கை எடுக்கப்படும் என, சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை