மேலும் செய்திகள்
வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
15-Feb-2025
வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்நாமக்கல்:நாமக்கல் - மோகனுார் சாலை, கனரா வங்கி முன் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கன்வீனர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். இதில், தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.போதிய அளவில் ஊழியர்களை பணியமர்த்த வேண்டும். வேலை செய்யும் இடத்தில் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வங்கி இயங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான வங்கி பணியாளர்கள் பங்கேற்றனர்.
15-Feb-2025