உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பராமரிப்பு இல்லாத கழிவறைமின்னக்கல் பெண்கள் அவதி

பராமரிப்பு இல்லாத கழிவறைமின்னக்கல் பெண்கள் அவதி

பராமரிப்பு இல்லாத கழிவறைமின்னக்கல் பெண்கள் அவதிவெண்ணந்துார்:வெண்ணந்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட மின்னக்கல் பஞ்., பிள்ளையார் கோவில் காடு பகுதியில் பெண்கள் கழிவறை உள்ளது. கடந்த, 2013ல் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டது. இதனை அப்பகுதியை சேர்ந்த, நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வந்தனர்.காலப்போக்கில் கழிவறை முறையாக பராமரிக்காததால், கழிவறையை பயன்படுத்த முடியாமல் மூடி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதி பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பராமரிப்பின்றி கிடக்கும் கழிவறையை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, மின்னக்கல் பஞ்., பிள்ளையார் கோவில் காடு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை